தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 87வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, துணைத் தலைவர்களாக ஸ்ரீகண்டன் ராஜா, பத்மநாபன், செயலாளர்களாக வெங்கடேஸ்வர ராஜா, ஆடிட்டர் நாராயணசாமி, இணைச் செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக ராமராஜ் தேர்வு செய்யப்பட்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பங்கேற்று மதுரை சங்கத்தின் சிறப்புகளை கூறினார். அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. இணைச்செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.