விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி, சூது பவள மணி என 2000த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், முன்னோர்கள் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயத்தில் ஒரு பகுதியில் இதழ்கள் வடிவமும் மறு பகுதியில் புள்ளி, கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது. எந்த பொருளாக இருந்தாலும் முன்னோர்கள் அலங்காரம் செய்தே பயன்படுத்தியுள்ளனர். அதே போல் இந்த தங்க நாணயமும் அலங்காரத்துடன் காணப்படுகின்றது, என்றார்.