உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி சாத்துாரில் விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி சாத்துாரில் விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

சாத்துார்: சாத்துாரில் விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ் நீதிமன்ற உத்தரவுபடி ஜப்தி செய்யப்பட்டது.சாத்துார் சின்ன ஓடைப்பட்டி கனகராஜ் கோவில்பட்டி. 2017 ஜூன் 9ல் டூவீலரில் கோவில்பட்டியில் இருந்து ஊர் திரும்பிய போது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.இவர் மனைவி சாந்தி, மகன் கண்ணன், மகள் காயத்ரி ஆகியோர் சாத்துார்சார்பு நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் மனு செய்திருந்தனர். சாத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் 2024 ஆக. 1, கனகராஜ் குடும்பத்திற்கு மதுரை மண்டல போக்குவரத்து துறை ரூ.21 லட்சத்து 17 ஆயிரத்து 350 இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை 2 மாதத்தில் நீதிமன்றக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். வரவு வைக்க தவறும் பட்சத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கவும் உத்தரவிட்டார்.ஆனால் மதுரை மண்டல போக்குவரத்து துறை இழப்பீடு செலுத்தவில்லை. இந்நிலையில் 2025 ஜூன் 6ல் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதுரை பஸ் ஸ்டாப் வந்த மதுரை மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றம் கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை