அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன் செய்தி குறிப்பு; ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 2025- - 26 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மே 27 வரை பதிவேற்றம் செய்யலாம். இதற்காக கல்லூரியில் உதவி மையம் செயல்படுகிறது.விண்ணப்பிக்க 10 , 12ஆம் வகுப்பு மார்க் சீட், ஆதார் அட்டை, ஜெராக்ஸ், வகுப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ் தேவை. மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.