மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-Mar-2025
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் முறையான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊர்வலம் நடத்தினர்.எம்.ஜி.ஆர்., சிலை முதல் தேசபந்து மைதானம் வரை நடந்த பேரணிக்கு மாவட்ட இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன் கோரிக்கைகளை விளக்கினார்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Mar-2025