அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டக்கிளை சார்பில் மூணு சதவீத அகவிலைப்படியை வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் திருப்பதி ராஜ் , மாவட்டச் செயலாளர் கருப்பையா பேசினர். இதில் அகவிலைப்படியை வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வட்டக்கிளை பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.