மேலும் செய்திகள்
பாரதியார் பல்கலையில் அதிகரிக்கும் முறைகேடுகள்
02-Nov-2024
விருதுநகர், : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நுாறு அரசு பள்ளி மாணவர்கள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை சென்று பார்வையிட்டனர்.நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் நுாறு மாணவர்கள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த களப்பயணத்தின் போது பல்கலைக் கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல், நீர் தொழில்நுட்ப மையம், உணவு தயாரிக்கும் தொழில்நுட்பம், வேளாண் உபகரணங்கள், நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், உயிரியல் தொழில்நுட்பம், பூச்சிகள் அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா, விதை மையம், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் வேளாண் தொடர்பான படிப்புகள் குறித்து பார்வையிட்டனர். பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பல்கலை கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
02-Nov-2024