உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாத்தா ஆசைக்காக காங்.,கிலிருந்து தி.மு.க.,வில் இணைந்த பேரன்

தாத்தா ஆசைக்காக காங்.,கிலிருந்து தி.மு.க.,வில் இணைந்த பேரன்

விருதுநகர்:தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற காங்., கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தேன் என விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்., துணை தலைவராக இருந்த சுரேந்திரன் தெரிவித்தார். காங்., கரூர் நகர் நிர்வாகி கவிதா தி.மு.க.,வில் இணைந்தார். இது தி.மு.க., - காங். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விருதுநகரில் இருந்து மீண்டும் ஒருவர் காங்., ல் இருந்து தி.மு.க.,வில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது. அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.,வை விமர்சித்துள்ளார்.தி.மு.க.,வில் இணைந்த சுரேந்திரன் குறித்து காங்., நிர்வாகிகள் கூறுகையில்,''அவர் 4 ஆண்டுகளாக காங்., மாவட்ட பொறுப்பில் இருந்தார்,'' என்றனர். சுரேந்திரன் கூறியதாவது: தாத்தா தி.மு.க., வைச் சேர்ந்தவர். சிவஞானபுரம் கிளைச்செயலாளர் என்பதால் கடந்த ஓராண்டாக என்னை தி.மு.க., விற்கு வலியுறுத்தினார். செப்., 25ல் அவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில், தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் நான் தி.மு.க., வில் எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலையில் இணைந்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ