உள்ளூர் செய்திகள்

குறைதீர் முகாம்

ராஜபாளையம், : ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட அளவிலான ரேஷன் அட்டைதாரர்களின் குறைதீர் முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் உதயசங்கர் தலைமை வகித்தார். தாலுகா வழங்கல் அலுவலர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே மனு அளித்த தகுதியான 39 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் ஆர்.ஐ., செந்தில்குமார், ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ