உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நேஷனல் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு சேவை மையம் அமைப்பு

நேஷனல் பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டு சேவை மையம் அமைப்பு

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் வழி காட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு குறித்த ஆலோசனைகள், சேவை வழங்கப்படுகிறது.பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டிஎன்இஏ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவு , பதிவேற்றம் செய்தல்,தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகள் மற்றும் கல்வியின் நிறுவனங்களை தேர்வு செய்தல் கலந்தாய்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துதல் போன்ற அனைத்து தொழில்நுட்ப மற்றும் தகவல் வழிகாட்டலையும் வழங்குகிறது.கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நேரில் வந்து இச்சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என முதல்வர் காளிதாசர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை