கையெழுத்து இயக்கம்
திருச்சுழி: அடி்படை வசதிகளை செய்து தரக் கோரி இ.கம்யூ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.திருச்சுழி அருகே மேலையூர் பகுதியில் தண்ணீர், ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மேலையூர் சந்திப்பு ரோட்டில் கழற்றப்பட்ட ஹை மாஸ் லைட்டை மீண்டும் பொருத்தவும், சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி இ.கம்யூ., சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு கிளைச் செயலாளர் லிங்கசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் சண்முகவேல், பொருளாளர் பொன்னுபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.