உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

நரிக்குடி: நரிக்குடி விடத்தகுளம் கோயில் ஊருணியில் கழிவு நீர் கலப்பதுடன், ஆகாயத்தாமரை வளர்ந்து அசுத்தமாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். நரிக்குடி விடத்தகுளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மந்தையில் கோயில் ஊருணி உள்ளது. சமீபத்தில் பெய்த பருவ மழைக்கு தண்ணீர் வந்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிரம்பியதால் அசுத்தமானது.அத்துடன் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளதால் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. ஊருணியைச் சுற்றி கோயில், பள்ளிக்கூடம், குடியிருப்புகள், ஊராட்சி அலுவலகம் இருப்பதால் எப்போதும் மக்கள் கூடும் இடமாக உள்ளது. துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளது.ஆட்கள் குளிக்க முடியவில்லை. உடலில் அரிப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஊருணியில் குளித்து விளையாடுவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. கால்நடைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. சுகாதாரக் கேட்டால் அப்பகுதியில் மக்கள் குடியிருக்க சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ