உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் நேரக்கட்டுப்பாட்டை மீறும் கனரக வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு

விருதுநகரில் நேரக்கட்டுப்பாட்டை மீறும் கனரக வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு

விருதுநகர்: விருதுநகரில் மதுரை ரோடு வழியாக கனரக வாகனங்கள் நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விருதுநகரில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் விருதுநகருக்குள் வருவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரக்கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் மதுரை ரோட்டில் வருமானவரி அலுவலகம் ரோடு வழியாக சென்று அரசு மருத்துவமனை மேம்பாலத்தை கடந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டைக்கு எவ்வித தடையும் இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. இதே போல மதுரை ரோட்டில் உள்ள பருப்பு கோடவுன்களுக்கும் நேரக்கட்டுப்பாட்டை மீறி கனரக வாகனங்கள் சர்வசாதாரணமாக வந்து மூலப்பொருட்களை இறக்குதல், உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்கின்றன. இதனால் மதுரை ரோட்டில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனை ரோட்டில் மேம்பாலத்திற்கு செல்லும் பகுதியில் அனுமதியின்றி நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் தினசரி போக்குவரத்து நெரிசலும், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது. எனவே நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்து செல்லும் கனரக வாகனங்கள் மீதும், அரசு மருத்துவமனைக்கு செல்லும் மேம்பாலம் ரோட்டில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை