உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர நெடுஞ்சாலைத்துறை முடிவு

அருப்புக்கோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர நெடுஞ்சாலைத்துறை முடிவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றிய பின்பும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீ து போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அருப்புக்கோட்டை நகரில் 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்ற படாமல் இருந்தது. உச்சகட்ட ஆக்கிரமிப்பால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், பஜார் பகுதிகளில் நடக்க முடியாமலும் இருந்தது. இதையடுத்து டிச.18ல், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, வருவாய் துறை, போலீசார் இணைந்து நகரில் முதற்கட்டமாக ரோடு ஓர ஆக்கிரமிப்புகள்,நடைபாதை கடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். 2ம் கட்ட ஆக்கிரமிப்புகள் நடத்த உள்ள நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை நீட்டித்தும், நடைபாதைகளை மறைத்தும் ஆக்கிரமிப்பு செய்துஉள்ளனர். மீண்டும் நகர் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் தினேஷ் குமார்: பொங்கல் பண்டிகைக்கு பிறகு நகரில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் நோட்டீஸ் வினியோகம் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடன் அவர்கள் மீது போலீஸ் மூலம் எப்.ஐ.ஆர்., போடப்படும். 2,500 ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயிலும் வழங்க பரிந்துரைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !