மேலும் செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
27-Jun-2025
விருதுநகர்:10 ஆண்டுகளாக சீனியாரிட்டி பட்டியலை ஏற்படுத்தாமல் தாமதிப்பதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளதாக ,தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறினர்.அவர்கள் கூறியதாவது:இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களது சீனியாரிட்டி பட்டியலை 10 ஆண்டுகளாக தயாரிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சீனியாரிட்டி பட்டியலை அறிவிக்க வேண்டும். அதையும் செய்வதில்லை.அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பதவி உயர்வுக்கான பட்டியல் மார்ச் மாதம் வெளியிட வேண்டும். பதிவுரு எழுத்தர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடை 5 சதவீதமாக குறைத்ததால் ஆயிரம் பேர் வரை வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விருப்ப கடிதம் பெற்ற உடனே பணி நியமனம் வழங்க சிறப்பு நடவடிக்கை வேண்டும்.ஏப். முதல் ஜூன் வரை தான் பணிமாறுதல் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் துறையில் செய்வதே கிடையாது. ஆனால் அரசியல் தலையீடு, சிபாரிசு மூலம் தொடர்ந்து பணிமாறுதல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மற்ற துறைகளுக்கு நடத்துவது போல் வெளிப்படையாக கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் வழங்க வேண்டும்.புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம், அறந்தாங்கி, கோவில்பட்டி ஆகிய கோட்ட அலுவலஙக்கள், தஞ்சாவூர் வட்ட அலுவலகம், உட்கோட்ட அலுவலங்களுக்கு கட்டுமானம், பராமரிப்பு பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
27-Jun-2025