உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வரத்து ஓடைகளில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுநீர் பரிதாபமாகுது சுகாதாரம் 

வரத்து ஓடைகளில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுநீர் பரிதாபமாகுது சுகாதாரம் 

விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி பாலகன் தெருவில் வரத்து ஓடை ஒன்றில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுநீர் விடப்படுகிறது. இதே போல் மாவட்டத்தில் பல நீர்வரத்து ஓடைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.மாவட்டத்தில் குடியிருப்பு வழியாக செல்லும் நீர்வரத்து ஓடைகள் பல செப்டிக் டேங்க் கழிவுநீரை வெளியேற்றுமிடமாக மாறி உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் நீர்வரத்து ஓடைகள் அனைத்தும் கழிவுநீர் ஓடைகளாக மாறிவிட்டன. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இவை ஆங்காங்கே அடித்து செல்லப்பட்டு குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கொசுத்தொல்லையும், துார்நாற்றமும் பரவலாக உள்ளது. வேலுச்சாமி நகர் அருகே உள்ள நீர்வரத்து ஓடையிலும் இதே சிக்கல் உள்ளது. வீடுகளில் இருந்து கழிவுநீரானது ஓடையில் கலக்கப்படுகிறது. இதே போல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதிகளிலும் குடியிருப்புகளை யொட்டி செல்லும் வடிகால் ஓடைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இதில் மனித கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் வருவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வரத்து ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ