மனித உரிமைகள் தினசட்ட விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ரெசிடியன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கே.தொட்டியபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் பங்கேற்று சட்டப்பணிகள் செயலாளர் நீதிபதி கவிதா பேசுகையில், மனிதர்கள் எதிலும் பாகுபாடு பார்க்க கூடாது என்பதை நினைவுபடுத்தவே மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைவரும் மனிதன் என்னும் ஒற்றை இனமே, அதில் உரிமைகள் அனைவருக்கும் சமமே, நாம் அனைவரும் மனிதனை மதிப்போம், மனிதநேயத்தை போற்றுவோம். மனித உரிமைகளை பாதுகாப்போம் என்றார்.பின்னர் முகாமில் பங்கேற்றவர்கள் சர்வதேச மனித உரிமை தின உறுதிமொழி எடுத்தனர். தொண்டு நிறுவன தலைவர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.