உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிவைடரில் டூவீலர் மோதியதில் கணவர் பலி: மனைவி காயம்

டிவைடரில் டூவீலர் மோதியதில் கணவர் பலி: மனைவி காயம்

அருப்புக்கோட்டை: மதுரை சிக்கந்தர் சாவடி வாசன் நகர் ரோஜா தெருவை சேர்த்தவர் கலைசெல்வன், 67, இவரது மனைவி ஜெயலட்சுமி, 48, இருவரும் நேற்று முன்தினம் தங்கள் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக அருப்புக்கோட்டைக்கு ஸ்கூட்டியில் மதியம் 3:00 மணிக்கு, மதுரை - அருப்புக்கோட்டை நான்கு வழி ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் விலக்கு அருகில், பின்னால்வந்த காருக்கு வழி விட முயன்ற போது ரோட்டின் நடுவில் உள்ள டிவைடரில் ஸ்கூட்டி மோதியது. இதில் கலைச்செல்வன் இறந்தார். மனைவி ஜெயலட்சுமி அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ