அனுமதி பெறாமல் இயங்கிய செப்டிக் டேங்க் வாகனம் பறிமுதல்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கருப்பசாமி நகரில் உரிமம் பெறாமல் செப்டிக் டேங்க் வாகனம் இயக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், செப்டிக் டேங்க் வாகனங்கள் அனுமதி பெற்று மட்டுமே இயங்க வேண்டும். இதுபோன்று விதிமீறி செயல்படும் வாகனங்கள் மீது பொது சுகாதார விதிகள், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடை சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.