உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அவசரகதியில்... * ஊராட்சிகளில் பேவர் பிளாக் ரோடு பணிகள் * பதவி முடிவதால் இதில் மட்டும் ஏன் ஆர்வம்

அவசரகதியில்... * ஊராட்சிகளில் பேவர் பிளாக் ரோடு பணிகள் * பதவி முடிவதால் இதில் மட்டும் ஏன் ஆர்வம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் பதவிக்காலம் முடிவதால் அவசரகதியில் பேவர் பிளாக் ரோடு போடும் பணிகள் நடக்கின்றன. அதிக கமிஷன் கிடைப்பதால் இதில் மட்டும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் அவசர கோலத்தில் நடப்பதால் சில மாதங்களிலே சேதமாகும் அபாயம் உள்ளது.நகர், ஊர்ப்புற வாழ்விட மேம்பாட்டில் தெருக்களுக்கு பேவர் பிளாக் ரோடுகள் போடுவது அதிகரித்து வருகிறது. தார் ரோடுகள் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் ரோடுகளுக்கு போடப்பட்டு வரும் நிலையில் மெயின் ரோடுகள் தவிர மற்ற தெரு ரோடுகள் பேவர் பிளாக் கற்கள் பதித்து தான் போடப்படுகின்றன. இந்நிலையில் இப்போது மெயின் ரோடுகள், நெடுஞ்சாலை ரோடுடன் இணையும் ஊரக ரோடுகளிலும் பேவர் பிளாக் ரோடுகள் போடப்படுவது அதிகரித்து வருகிறது.ஊர்ப்புறங்கள் வழியாக கனரக வாகனங்கள் பயன்பாடு இருப்பதால் இவை எளிதில் சேதமடைந்து விடுகின்றன. மீண்டும் பயன்படுத்த முடிவதில்லை. போட்ட சில ஆண்டுகளிலே சேதம் ஆவதால் பேட்ஜ் ஒர்க் செய்யும் காலம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. அதுவும் பேவர் பிளாக் ரோடு என்பதால் சிறு சேதம் ஏற்பட்டாலும் ரோட்டின் அமைப்பே மாறி அப்பகுதி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. ஊராட்சிகளில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது என்றால் இது போன்ற ரோடுகளை தெருப்புறங்களில் அமைக்கலாம்.இருப்பினும் தற்போத பதவிக்காலம் முடியும் சூழலிலும் பேவர் பிளாக் ரோடுகள் போடவே அதீத ஆர்வத்தை ஊராட்சி நிர்வாகங்கள் காட்டியுள்ளன. காரணம், இந்த பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் உறவினர்கள் மூலம் செய்ய வைத்து அதிக கமிஷன் அடிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.டிசம்பரில் அவசர கோலத்தில் போடப்படும் இந்த ரோடுகள் மார்ச் வரை கூட தாங்காது என மக்கள் புலம்புகின்றனர். சிறப்பு அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் வந்து விட்டால் எந்த பணியும் சரியாக நடக்காது என்றும் பரிதவிக்கின்றனர். கனரக வாகனங்கள் ஏறி சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகளையே இன்னும் சரி செய்யாமல் உள்ளனர். இந்த சூழலில் ஆர்வத்துடன் போடப்பட்ட பேவர் பிளாக் ரோடுகளின் தரத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை