மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
7 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
7 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
7 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
7 hour(s) ago
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு மட்டுமல்லாது அச்சு தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடைபெற உள்ளது. இங்குள்ள நிறுவனங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்கள், தலைவர்களின் முகமூடிகள், பேட்ஜ்கள், தோரணங்கள், தொப்பிகள், கட்சி சின்னம் பொறித்த துண்டுகள், மப்ளர்கள், வேட்டி, சேலைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதனால் இத்தொழில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகாசி வீர நாகம்மாள் ஆர்ட்ஸ் உரிமையாளர் காசிராஜன் கூறியதாவது:நாங்கள் துணிகளில் மட்டுமே அச்சடித்து தருகிறோம். தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்படுத்தப்படுவதில்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு கொடுக்கப்பட்ட விலையே இந்த லோக்சபா தேர்தலுக்கும் உள்ளது. கட்சியினர் பிரசாரத்தை துவங்கியவுடன் அதிக அளவில் ஆர்டர் கொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கூறினார்.அதுபோல, குமாரபாளையம் பகுதியில், கட்சிகளின் சின்னம், வண்ணங்களுடன் மப்ளர் தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago