உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை

மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் டிச. 12, 13 ஆகி தேதிகளில் மழை அதிகளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து மக்கள் தயார்நிலையில் இருந்தனர். எதிர்பார்த்தது போலவே விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்து கொட்டி தீர்த்தது. இடைவிடாத சாரல் மழையாக காலை முதல் மாலை வரை தொடர்ந்தது. விருதுநகரில் மதுரை ரோடு, மெயின் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் பகுதகிளில் மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். வியாபாரிகள் காய்கறிகளை நனையாமல் பாதுகாத்தனர். முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது.இதே போல் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் காலையில் இருந்து மழை பெய்து கொட்டி தீர்த்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி பகுதிகளில் பரவலான மழை பெய்தது. இதனால் மக்கள் சிரமத்தை சந்தித்தனர். அதே நேரம் 3 வாரங்களாக மழை ஏதுமில்லாமல் வறண்ட வானிலையாக காணப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக மழையை எதிர்பார்த்து நடவு செய்த நிலையில், குளிர்ந்த சூழல் மட்டுமே நிலவி வந்தது. மழை இல்லாததால் பயிர்கள் வாடிய நிலையில், நேற்று பெய்த மழையால் அவற்றிற்கு போதிய நீர்வரத்து ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ