உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருஷ்ணன்கோவில் -- வத்திராயிருப்பு ரோட்டில் டூவீலர் விபத்து அதிகரிப்பு

கிருஷ்ணன்கோவில் -- வத்திராயிருப்பு ரோட்டில் டூவீலர் விபத்து அதிகரிப்பு

வத்திராயிருப்பு : கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் அடிக்கடி டூவீலர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவில் டூவீலர்களில் பயணித்து வருகின்றனர். அதிலும் காலை, மாலை வேலை நேரங்களில் அதிவேகத்தில் செல்பவர்களால் எதிர்திசையில் டூவீலர்களில் வரும் முதியவர்கள், விவசாயிகள் விபத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட டூவீலர் விபத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.மேலும் இந்த ரோட்டில் குறைந்த பட்சம் தினமும் ஒரு டூவீலர் விபத்து ஏற்பட்டு ஒருவரது குறைந்த பட்ச காயமடைந்து வருகின்றனர். இதனை தடுக்க, இந்த ரோட்டில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை கிருஷ்ணன்கோயில், வத்திராயிருப்பு போலீசார் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ