உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெசவுக்கூலி உயர்வு

நெசவுக்கூலி உயர்வு

விருதுநகர்: வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பொங்கல் 2027ல் உற்பத்தி செய்யப்படும் புதிய ரக வேட்டி, சேலை ரகங்களுக்கு வழங்கப்படும் நெசவு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நெசவுக்கு முந்தைய கூலி சேலை ஒன்றுக்கு பழைய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.28 வழங்கப்பட்ட நிலையில் புதிய ரக பெடல்தறி சேலைக்கு அதே ரூ.28 வழங்கப்படுகிறது. மேலும் நெசவு கூலி சேலை ஒன்றுக்கு ரூ.75.95 வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.97.72 நிர்ணயம் செய்து கூடுதலாக ரூ.21.77 வழங்கப்படுகிறது. மொத்த கூலியாக சேலை ஒன்றுக்கு பழைய ரக பெடல் தறி சேலைக்கு ரூ.103.95 வழங்கப்பட்ட நிலையில் புதிய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.125.72 நிர்ணயம் செய்து கூடுதல் கூலியாக ரூ.21.77 வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !