மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் அறிவியல் தினம்
01-Mar-2025
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் கோட்பாட்டு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடந்தது.பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமி புதுடில்லி, இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் தேசிய அறிவியல் அகாடாமி இணைந்து எஸ். ஆர் .என். எம். கல்லுாரியில் மார்ச் 17 முதல் மார்ச் 30 வரை கோட்பாட்டு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது.இதன் துவக்க விழாவில்கல்லுாரி முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சீனிவாசன், இயக்குனர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணன், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் கோவிந்த் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர்.முன்னதாக இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் சுந்தர வெங்கடேஷ் வரவேற்றார். உதவி பேராசிரியர் நித்யா நன்றி கூறினார். இயற்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
01-Mar-2025