உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத சிக்னல்கள், சேதமான மின்கம்பம்

செயல்படாத சிக்னல்கள், சேதமான மின்கம்பம்

சிவகாசி: செயல்படாத டிராபிக் சிக்னல்கள் , துார் வாராத வாறுகால் ,சேதமான மின்கம்பம் உட்பட எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி சிவகாசி சாத்துார் ரோடு பகுதி மக்கள் தவிக்கின்றனர்.சிவகாசி சாத்துார் ரோடு பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாமல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவது முக்கிய பிரச்னையாக உள்ளது. சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் பஸ் ஸ்டாண்ட் , சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு பிரிந்து செல்கின்றது.நகருக்குள், பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டிய அனைத்து வாகனங்களும் இதன் வழியாகத்தான் வரவேண்டும். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நாளிலிருந்து டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் விசேஷ காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.சிக்னல் அருகிலேயே உள்ள இரு டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதன் அடி முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. வாகனங்கள் செல்லும்போது அதிர்விலேயே கீழே விழ வாய்ப்புள்ளது. சாத்துார் ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.பாண்டியன், சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் துார்வார வில்லை. பெரும்பான்மையான இடங்களில் வாறுகாலில் முட்புதர்கள் ஆக்கிரமித்து துார்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வாறுகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகை சிவம், சிவகாசி: இப்பகுதியில் ரோட்டில் இருபுறம் பாதி அளவினை மறைத்து மணல்கள் கொட்டி கிடக்கின்றது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் மணல்களால் மழைக்காலங்களில் ரோடு சகதியாக மாறிவிடுகின்றது. சாத்துார் ரோடு விலக்கிலிருந்து கிழக்கு மயான சாலை செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. அருகில் உள்ள பிள்ளக்குழியில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.ஜவஹர், சிவகாசி: சாத்துார் ரோட்டிலும், ஓடையிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றது. குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாததால் ரோட்டிற்கு வந்து விடுகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை