உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்

கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்

சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான பெண்கள் செஸ், பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் நடந்தது. துவக்க விழாவில் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார். கல்லுாரி செயலர் அருணா தலைமை வகித்தார். முதல்வர் சுதா பெரியதாய் வாழ்த்தினார். பல்கலைக்கழக உடற்கல்வி துறை பேராசிரியர் ரமேஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட 25 கல்லுாரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இரு நாட்கள் போட்டிகள் நடைபெறும் நிலையில் நாளை இறுதிப்போட்டி நடைபெறும். வெற்றி பெற்ற மாணவி களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி