சிறிய ஜவுளிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்காக குறைந்த பட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். தகுதி வாய்ந்த திட்டமதிப்பில் உட்கட்டமைப்பு, பொது வசதிகள், தொழிற்சாலைக்கான கட்டடங்களுக்கு 50 சதவிதம், ரூ. 2.50 கோடி இந்த இரண்டில் எது குறைவானதோ அதை மானியமாக வழங்கப்படும்.இந்த திட்டம் குறித்து மதுரை மண்டல துணிநுால் துணை இயக்குநர் அலுவலகம், 34 - விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை - 625 014, தொலைபேசி எண் 0452 - 253 0020, 96595 32005 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.