உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகளிர் வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு

மகளிர் வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு

விருதுநகர: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து, அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பயன் பெறுவதற்கு tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். முதற்கட்ட முகாம் 2024ல் நடந்த நிலையில், விடுப்பட்ட பெண் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு 2ம் கட்ட முகாம் பி.டி.ஓ., அலுவலகங்களில் ஜூன் 19 காலை 10:00 மணி முதல் மாலை 5:30 வரை உறுப்பினர் சேர்க்கை நடக்கவுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி