உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 564 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

564 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.இதில் 142 நிறுவனங்கள், 2468 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 564 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் 2 மாற்றுத்திறனாளிகள் அடங்குவார்கள். மேலும் 2வது கட்ட தேர்விற்கு 253 பேர் தேர்வாகியுள்ளனர். திறன் பயிற்சிக்கு 31 பேரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர 35 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் தங்கம் தென்னரசு பணிநியமன ஆணை வழங்கி பேசினார். வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வேலை வாய்ப்பு, பயிற்சித்துறையின் திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் கவிதா, விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன், கல்லுாரி முதல்வர் சாரதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் (பொது) ஞானபிரபா, (தொழில்நெறி வழிகாட்டல்) பிரியதர்ஷினி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை