உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெய்தது மழை: விதைக்கும் பணிகள் தீவிரம்

பெய்தது மழை: விதைக்கும் பணிகள் தீவிரம்

திருச்சுழி: திருச்சுழி அருகே மழையை எதிர்பார்த்து விவசாய நிலங்கள் உழப்பட்டு தயாரான நிலையில், மழை பெய்ததால் விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். திருச்சுழி அருகே ஆலடிபட்டி, கல்லூரணி, பொம்மகோட்டை, கல்லு மடம், கல்யாணசுந்தரபுரம், ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையின்படி, விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விதைக்க தயார் நிலையில் வைத்துள்ளனர். ஏற்கனவே மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தாமதமானதால் வருகிற நாட்களில் பெய்யக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்து தங்கள் நிலத்தை மும்முரமாக டிராக்டர் மற்றும் கருவிகள் மூலம் தீவிரமாக உழுது வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 6 :00மணிக்கு திடீரென கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில் மழையால் நிலம் குளிர்ந்தது. இதில் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விதைகளை விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். அடுத்தடுத்து மழை பெய்ய கூடும் என்பதால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி