உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு

 ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு

சிவகாசி: மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் சிவகாசி, திருத்தங்கலில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஜெ., வின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியினர், மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். *விருதுநகரில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா பங்கேற்றனர். *ஸ்ரீவில்லிபுத்துாரில் எம்.எல்.ஏ.மான்ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திர பிரபா, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, முருகன், நகரச் செயலாளர் காமராஜ், பொருளாளர் அங்குராஜ், உட்பட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். * அருப்புக்கோட்டையில் நகரச் செயலாளர் சோலை சேதுபதி, ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், மாவட்ட துணை செயலாளர் ராமர், மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் சக்கரவர்த்தி சங்கர், நகர மகளிர் அணி இணைச் செயலாளர்கள் சித்ரா ஜெய்சங்கர், பிரேமா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக., சார்பாக ஆத்திப்பட்டியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ராஜேஸ்வரி, விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்பு பிரிவு துணைச் செயலாளர் அஜய் வாசுதேவன், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை