மேலும் செய்திகள்
நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
03-May-2025
நரிக்குடி; நரிக்குடி ஒட்டங்குளத்தில் அய்யனார், கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கனகராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். ஏ.எஸ்.பி., அசோகன், திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், முன்னிலை வகித்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 360 காளைகள், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் ரொக்கம், வெள்ளி, கட்டில், தங்க நாணயங்கள், சில்வர் குண்டா, பேன் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
03-May-2025