உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி

கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய பேராலி கண்மாய் ரோட்டில் தடுப்புச் சுவர், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு தனி கட்டடம் இல்லை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலியில் இருந்து மாந்தோப்பு, மேல, கீழ அழகிய நல்லுார் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ரோடு பெரிய பேராலி கண்மாய் கரை வழியாக செல்கிறது. இந்த ரோடு மிகவும் குறுகலாகவும், இருபுறம் பள்ளம் நிறைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இவ்வழியாக வாகனங்கள் எதிரெதிரேகடந்து செல்ல எதுவாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.முனியாண்டி கோயில், விளை நிலங்களுக்கு செல்ல ஜல்லி நிரப்பப்பட்டு ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் தார் ரோடாக அமைக்கப்படாததால் தற்போது சேறும், சகதியுமான ரோட்டில் செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். இங்குள்ள ரேஷன் கடைக்கு அருகே கூடுதலாக நெற்களம் அமைக்க வேண்டும்.மேலும் வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு தனியாக கட்டடம் இல்லாமல் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தின் ஒரு பகுதியில் செயல்படுகின்றன. தபால் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள வாறுகால்களை துார்வார பணியாளர்கள் இல்லாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ