உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார்த்திகை அகல் விளக்கு விற்பனை படுஜோர்

கார்த்திகை அகல் விளக்கு விற்பனை படுஜோர்

விருதுநகர், : கார்த்திகை தீபத் திருவிழா டிச. 13ல் கொண்டாடப்படுவதால் கார்த்திகை அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மதுரை, மானாமதுரை பகுதிகளில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் கொண்டுவரப்பட்டு அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் வழக்கமான முறையில் இல்லாமல் தற்போது புதிய டிசைன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.இந்த விளக்குகளை வைப்பதற்கு தங்கம், வெள்ளியால் உருவாக்கப்பட்டது போல தோன்றும் ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அகல் விளக்குகள் தரம், அளவிற்கு ஏற்றாற் போல ரூ. 1 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (டிச. 13) கொண்டாடப்படுவதால் மக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வீட்டிற்கு தேவையான அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.வியாபாரி செல்வம் கூறியதாவது: அகல் விளக்குகள் விலையில் மாற்றம் இன்றி இருப்பதால் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மக்கள் பலரும் வந்து புதிய டிசைன்களை வாங்கி செல்கின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி