உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நேர மாற்றத்தால் வேகம் எடுக்கும் கொல்லம் எக்ஸ்பிரஸ் --ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

நேர மாற்றத்தால் வேகம் எடுக்கும் கொல்லம் எக்ஸ்பிரஸ் --ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம் : ரயில்வே புதிய கால அட்டவணை திருத்தத்தின்படி நேர மாற்றங்களால் 20 நிமிடம் முன்னதாக கொல்லம் எக்ஸ்பிரஸ் வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் வேகத்தில் இயக்கப்பட உள்ளது குறித்து ரயில் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஜன. 1 முதல் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்படும். ராஜபாளையம் வழியே இயங்கி வரும் கொல்லம் எக்ஸ்பிரஸின் (16101) நேரம் பெரும்பாலான ஊர்களில் 20 நிமிடங்கள் முன்னதாக வருமாறு மாற்றம் கண்டுள்ளது.தமிழ்நாட்டிற்குள் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ., ஆகும். திருநெல்வேலி, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்கள் சராசரி வேகம் மணிக்கு 85 கி.மீ.,அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ்ன் நேர மாற்றத்தின்படி எழும்பூரில் மாலை 5:00 மணிக்கு கிளம்பி ராஜபாளையத்தில் அதிகாலை 1:48 மணிக்கு வந்து சேரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. (பழைய நேரம் அதிகாலை 2:08 ) 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் பயண நேரம் 8 மணி 48 நிமிடங்களாகவும், சராசரி வேகம் மணிக்கு 70 கி.மீ., என உள்ளது. தென்காசி வரை சராசரியாக 70 கி. மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளதால் விரைவான பயணம் ஜன. முதல் சாத்தியமாகும்.இதுகுறித்து ராஜபாளையம் ரயில் பயணாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன்: ராஜபாளையம் நகரின் பொது போக்குவரத்து வாகனங்களில் (பஸ், ரயில்) இத்தனை நிறுத்தங்களுடன் இவ்வளவு குறைவான நேரத்தில் பயண துாரத்தை கடக்கும் முதல் ரயிலாக கொல்லம் எக்ஸ்பிரஸ் மாறுவது வரவேற்கத்தக்கது. வருங்காலத்தில் எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றமும், தண்டவாள வேகம் அதிகரிக்கப்படும் போது இவ்வண்டி இன்டர்சிட்டி ரயில்களைப் போல இன்னும் வேகம் எடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ