சீனிவாச பெருமாள் கோயிலில் கிரிவலம்
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் சனி உற்சவத்தை முன்னிட்டு கிரிவலம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் 3:30 மணிக்கு பெருமாள் கிரிவலம் நடந்தது. கிரிவலம் பாதையில் திரண்டிருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலை துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.