ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டு
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி கழகம் சார்பாக, சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் சீனிமுகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். அமெரிக்கா ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகம், உலகின் முன்னணி அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் எல்.சி.வி.ஆர்., இணைந்து சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டது. அப்பட்டியலில் சேது பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜெபக்குமார் இடம் பெற்றார். 2 லட்சத்து 23 ஆயிரத்து 153 பேர் அடங்கிய தரவரிசை பட்டியலில், 45 ஆயிரத்து 220வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். 125 அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்நாடு, வெளிநாடு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகள், உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை தலைவி பாரிஷா பேகம், பேராசிரியை தமிழ்ச்செல்வி, எம். பி.டி.எல்., தேர்வில் தங்கம் வென்ற நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.