உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விநாயகர் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் 4 கோயில்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் படித்துறை விநாயகர் கோயில், வினை தீர்த்த விநாயகர் கோயில், வல்லப கணபதி கோயில், நீர் காத்த அய்யனார் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.நேற்று முன்தினம் அனுக்ஞை, விநாயகர் பூஜை,கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை, ரக்ஷா பந்தனம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பக்தன மருந்து சாற்றுதல் உட்பட பூஜைகளும் தொடர்ந்து 2, 3 ம் கால பூஜைகள் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடக்கிறது. கோயில்களில் முன்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.* அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. முதல் கால கணபதி ஹோமம் உட்பட பூஜைகள் நடந்தது. நாளை காலை 9: 15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை