வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக கல்வி அதிகாரி அலுவலகம் பள்ளிக்கல்வி வளாகத்தில் அமைந்திருப்பதுதான் சரி. ஏன் மாற்றவேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்ட உதவிகளை கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒன்றியத்திற்கு ஒரு வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலும் அரசு பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட வளாகப் பகுதிகளை ஆக்கிரமித்து வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக கல்வியாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது . சிவகாசி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் எஸ்.எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளது. இக்கட்டடம் தொகுதி எம்.எல்.ஏ.,வின் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவியருக்கான கூடுதல் கழிப்பறை குடிநீர் வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு என அமைக்கப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார கல்வி அலுவலகம் கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வத்திராயிருப்புக்கான அலுவலகம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது.இது போல் பெரும்பாலான வட்டார கல்வி அலுவலகம் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படுவதால் பள்ளி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததை அடுத்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அரசு பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் வேறு இடங்களில் மாற்றி செல்ல வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை மாற்றப்படாமல் செயல்படுவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பித்தல் மற்றும் இட வசதி பற்றாக்குறையால் சிக்கல் இருந்து வருகிறது. எனவே வட்டார கல்வி அலுவலகத்துக்கு தனி கட்டட வசதி அவசியம்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்வித்துறையின் உத்தரவை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக கல்வி அதிகாரி அலுவலகம் பள்ளிக்கல்வி வளாகத்தில் அமைந்திருப்பதுதான் சரி. ஏன் மாற்றவேண்டும்.