ஆய்வகத் திறப்பு விழா
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில் நுட்பக்கல்லுாரியில் சிஸ்கோவால் சான் றளிக்கப்பட்ட சி.சி.என்.ஏ., ஆய்வகம் திறப்பு விழா கல்லுாரி தலைவர் முரளி தரன் தலைமையில் நடந்தது. பெங்களூரு சிஸ்கோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் திட்ட மேலாளர் அஜய்குமார் ஆய்வகத்தை திறந்து வைத்தார். இதில் கல்லுாரி செயலாளர் மகேஷ் குமார், துணைத்தலைவர் தனபால், இணைச்செயலாளர் நடராஜன், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில், நிர்வாக உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.