உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் ஆய்வக பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் ஆய்வக பயிற்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வக செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், அருப்புக்கோட்டை எஸ்.டி.ஆர்.என்., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் செல்லத் தாய் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.கல்லூரியில் உள்ள வேதியியல், இயற்பியல், விலங்கியல் துறைகளின் ஆய்வக்கூடங்களில் மாணவர்களுக்கு துறை பேராசிரியர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் மாணவர்கள் தனித்தனியாக பயிற்சி செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியை யாஸ்மின் கதீஜா பேகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ