கண்மாய் காப்போம்
சிவகாசி: கண்மாய் கரையில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், மடை சேதம் என விளாம்பட்டி கிடாக்குளம் கண்மாய் எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடுகின்றது. சிவகாசி அருகே விளாம்பட்டியில் கிடாக் குளம் கண்மாய் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு , 50 ஏக்கர் பாசனம் வசதி உடைய இந்த கண்மாயை நம்பி விளாம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி விவ சாயிகள் நெல் பயிரிடு கின்றனர். கண்மாய் கரை முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் இடைவெளி இன்றி ஆக்கிரமித்து உள்ளது. கரையும் மிகவும் பலவீனமடைந்து உள்ளது. இந்தக் கண்மாய்க்கு அருகில் உள்ள பெரிய பொட்டல்பட்டி கண்மாய் நிறைந்து ஓடை வழியாக தண்ணீர் வரும். ஆனால் ஓடை முழுவதும் புதர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீர் வர வழி இல்லை. கண்மாயில் உள்ள உள்ள மடையில் முழுவதும் மண் மேவி காணப் படுவதுடன் சேதமும் அடைந்துள்ளது. இதனால் மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல வழி இல்லை. இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்து விட்டது. அனைத்து நிலங்களும் தரிசாக மாறிவிட்டது. கண்மாயினுள் குப்பை கொட்டப் படுவதால் தண்ணீர் வீணாகின்றது. கார்த்தீஸ்வரன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்: கண்மாயினுள் கிணறு அமைக்கப்பட்டு இப் பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படு கின்றது. கண்மாய்க்கு தண்ணீர் வராததால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. சேதம் அடைந்த மடையை சீரமைப்பதோடு மடையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும். செந்தில்வேல், விவசாயி: கண்மாய் கரை முழு வதுமே சீமைக் கருவேல மரங்கள் இடைவெளியின்றி நிறைந்துள்ளது. தவிர கரையும் பலவீன மடைந்து உள்ளது. எனவே கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதோடு கரையை யும் பலப்படுத்த வேண்டும். லிங்கம், விவசாயம்: கண்மாய்க்கு தண்ணீர் வராததால் இந்த ஆண்டு விவசாயம் முழுமையாக பொய்த்துவிட்டது. கண்மாய்க்கு வருகின்ற ஓடையை துார்வார வேண்டும். அடுத்த ஆண்டிலாவது விவ சாயத்திற்கு வழி செய்ய வேண்டும். கரையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.