உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குமரி --- புதுச்சேரி ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள்

குமரி --- புதுச்சேரி ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள்

விருதுநகர்:பயணிகளின் பாதுகாப்பு, வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி - - புதுச்சேரி இடையேயான வாராந்திர ரயில்கள் ஜூன் முதல் எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஞாயிறு தோறும் மதியம் 1:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில் (16861) மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு குமரி செல்லும். மறுமார்க்கம் திங்கள் தோறும் மதியம் 2:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:25 மணிக்கு புதுச்சேரி செல்லும்.இவ்விரு ரயில்களும் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கடலுார் துறைமுகம், விழுப்புரம் வழியாக செல்கின்றன.ஜூன் 29 முதல் புதுச்சேரி ரயிலும், ஜூன் 30 முதல் குமரி ரயிலும் எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ