உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் குத்தகை நிலுவை கட்டடங்களின் உரிமங்கள் ரத்து--

ராஜபாளையத்தில் குத்தகை நிலுவை கட்டடங்களின் உரிமங்கள் ரத்து--

ராஜபாளையம்: ராஜபாளையம் நகரில் நீண்ட காலமாக குத்தகை தொகை நிலுவை வைத்துள்ள திருமண மண்டபங்கள் கடைகளின் குத்தகைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ராஜபாளையத்தில் நீர் பிடிப்பு பகுதிகள் அரசு புறம்போக்கு இடங்களில் குத்தகை அடிப்படையில் திருமண மண்டபங்கள் கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டடங்களுக்கான குத்தகை பாக்கி தொகை பல கோடி ரூபாய் அளவில் அரசுக்கு செலுத்தாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வாடகை வசூலித்தும் அரசுக்கான குத்தகை பணம் கோடிக்கணக்கில் நிலுவை வைத்திருந்ததால் உயர் நீதிமன்றம் குத்தகை உரிமையை ரத்து செய்ய ஆணையிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நிலுவை வைத்திருந்த திருமண மண்டபங்கள் ,கடைகள் உள்ளிட்ட கட்டடங்களின் குத்தகை உரிமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை