உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மது பாட்டில்கள் பறிமுதல்

 மது பாட்டில்கள் பறிமுதல்

நரிக்குடி: குடியரசு தினத்தை முன்னிட்டு நரிக்குடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் போலீசார் கனகராஜ், பெத்தனசாமி, சோலைராஜ், சதீஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நரிக்குடி ரயில்வே நிலைய பகுதியில் சுப்பிரமணியன் தோட்டத்தில் குழிதோண்டி மது பாட்டில்களை புதைத்து வைத்திருந்தது தெரிந்தது. தோண்டப்பட்டு, 303 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இருஞ்சிறை ரயில்வே கேட் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் சோதனை செய்தபோது மறையூரைச் சேர்ந்த குமார் விற்பனை செய்தார். அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை