உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அந்தந்த மாவட்டங்களில் கிடை கால்நடைகள் கணக்கெடுப்பு

அந்தந்த மாவட்டங்களில் கிடை கால்நடைகள் கணக்கெடுப்பு

விருதுநகர் : மலையடிவார பகுதி களில் மேயும் கிடை மாடுகள், ஆடுகளின் எண்ணிக்கை விடுபடுவதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் மேய்ச்சலின் போது கணக்கெடுக்க கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதில் 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், 1500 மேற்பார்வையாளர்கள், 6700 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேனி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மலையில் மேயும் கிடை மாடுகள், ஆடுகள் அதிக அளவில் உள்ளது. இவை மேய்ச்சலுக்காக அடிக்கடி மாவட்டம் விட்டு மாவட்டம் இடப்பெயர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் மேய்ச்சல் கால்நடைகளை இரட்டிப்பு கணக்கெடுப்பு செய்து குளறுபடிகள் நடந்தன. இதனால் சரியான தரவுகளை திரட்டுவதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.இந்தாண்டு நாட்டு மாடுகள், மலையில் மேயும் மாடு, ஆடுகள், வாத்துக்களை கணக்கெடுப்பின் போது தற்போது இருக்கும் மாவட்டத்தில் வைத்தே கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது இரட்டிப்பு கணக்கெடுப்பு நடக்காமல் இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் அனைத்து பிப்ரவரியில் முடிக்கப்படும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ