உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கடன் திட்ட அறிக்கை வெளியீடு

 கடன் திட்ட அறிக்கை வெளியீடு

விருதுநகர்: விருதுநகரில்மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2026-27ம் நிதியாண்டிற்கு 22 ஆயிரத்து 681 கோடிக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வங்கி மேலாளர்கள் கூட்டம், கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. நபார்டு வங்கி ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மாவட்டத்தின் 2026--27 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட ஆவணத்தை நபார்டுவெளியிட்டுள்ளது. அதன்படி முன்னுரிமைத் துறை கடனளிப்பின் கீழ் மாவட்டத்தில் வழங்கக்கூடிய மொத்த கடன் திறன் ரூ.22 ஆயிரத்து 681.31கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ரூ.11 ஆயிரத்து 576.97 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது.குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறைக்கு ரூ.9 ஆயிரத்து 418.48 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது. பிற துறைகள் ரூ.918.48 கோடி. நபார்ட் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனுஷா எலிசபெத், கடன் திறனை விளக்கிப் பேசினார். நபார்டு மாவட்ட மேலாளர் ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர்பாண்டிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !