வீடு தேடி வீட்டுமனை பட்டா
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மனுவை உடனடியாக பரிசீலித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி தமிழகத்தில் முதலிடத்தில் வகிக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் சிவந்திபட்டி கிராமத்தில் வருவாய்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா ஆணை பெற்று வீடு கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்களை கலெக்டர் சுகபுத்ரா நேற்று காலை ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கினார். அப்போது சிவகாசி ஆர்.டி.ஓ., பாலாஜி, தாசில்தார் பாலமுருகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.