டூவீலர் மோதி லாரி டிரைவர் பலி
ராஜபாளையம்: தளவாய்புரம் அடுத்த முகவுரை சேர்ந்தவர் வேடசாமி 65, லாரி டிரைவர். நேற்று முன்தினம் தளவாய்புரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் லாரியை நிறுத்திவிட்டு இரவு 8:00 மணிக்கு மலை கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். டூவீலரில் வந்த முகவூரை சேர்ந்த செல்வம் 22, நிலை தடுமாறி மோதியதில் வேடசாமி தலையில் பலத்த காயமடைந்து பலியானார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.